ஆசிரியர்களின் பணி இடங்களுக்கு வேறு ஆசிரியர்கள் நியமனம்

Comments (0) அரசியல், கல்வி, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் 447 பேரின் பணியிடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு, அந்த இடங்களுக்கான பணி இடமாறுதல் உத்தரவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்த போராட்டத்தால் , பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு அம்சமாக, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க மாவட்ட வாரியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கான 3500 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டன. ஆசிரியர் பயிற்சி, பி.எட் முடித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்பவர்கள், அரசின் அறிவிப்பு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தந்துள்ளதாக தெரிவித்தனர்.சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்களை பட்டதாரிகள் ஆர்வமுடன் வழங்கினர். இதுவரை 3 ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதே போன்று நெல்லை மாவட்டத்திலும் ஏராளமானவர்கள் தற்காலிக ஆசிரியர் பணி இடத்திற்கு விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 80 ஆயிரம் பேரில் 5 ஆயிரம் பேர் பணிக்குத் திரும்பியிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.தொடக்கக் கல்வித்துறையில் மொத்தமுள்ள ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 836 ஆசிரியர்களில் 50 ஆயிரத்து 288 பேர் மட்டுமே பணி செய்கின்றனர். 4341 பேர் அனுமதி பெற்று விடுப்பில் இருப்பதாகவும், 96 ஆயிரத்து 207 பேர் அனுமதியின்றி விடுமுறை எடுத்துள்ளதாகவும் தொடக்க கல்வித்துறை கூறியுள்ளது.

இதனிடையே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர். இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அரசுப் பள்ளிகள் வழக்கம் போல இயங்கியதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, சென்னையில் ஆசிரியர்கள் 12 பேரும், காஞ்சிபுரத்தில் 11 பேரும், திருவள்ளூரில் 5 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கல்வித்துறை கூறியுள்ளது. இதனிடையே, தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 447 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்களது பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த பணியிடங்களுக்கு விருப்பப்பட்டவர்களுக்கு பணியிடமாற்றம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. திங்கட்கிழமை அன்று பணிக்கு திரும்பிய ஆசிரியர்களுக்கு அவர்கள் விரும்பிய இடத்திற்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது.

இதனிடையே ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப செவ்வாய்கிழமை காலை 9 மணி வரை அரசு அவகாசத்தை நீடித்துள்ளது. வேலை நிறுத்த த்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் செவ்வாய்கிழமை காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டுமென கூறப்பட்டுள்ளது. பணிக்கு திரும்புவது குறித்து தொலைபேசி, வாட்ஸ் அப், மற்றும் குறுந்தகவல்கள் மூலம் தெரிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு திரும்புவது குறித்த தகவலை தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலரிடமும், உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலரிடமும் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. செவ்வாய் கிழமை காலை 9 மணிக்குள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்களின் பணி இடங்கள் காலி என்று அறிவித்து, அதனை நிரப்ப தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் GFX OUT என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *