பிரதமர் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்?

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவையின் கூட்டம் இன்று நடைபெற வாய்ப்புள்ளது என்றும் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் குறித்து இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நடைபெற இருந்த அமைச்சரவைக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் இதன் முதல் நாளில் குடியரசுத் தலைவர் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்களை முடிவு செய்வதற்காக பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூடி விவாதிக்க இருந்தது. இக்கூட்டத்தில் விவசாயிகளுக்காக பல்வேறு சலுகைகள் வெளியாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்ப்பு நிலவியது.வழக்கமான அமைச்சரவைக் கூட்டம் புதன் கிழமை நடைபெறும். இந்நிலையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுமா என்பது குறித்தும் நேற்று அது திடீரென ரத்து செய்யப்பட்டது குறித்தும் எந்தவித அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியிடப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *