போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மேலும் 600 பேர் சஸ்பென்ட்

Comments (0) கல்வி, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மேலும் 600 பேர் சஸ்பென்ட் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 8 நாட்களாக ஆரிசிரியர்கள் போராடி வருகின்றனர். அவர்களை அரசு பணிக்கு திரும்புமாறு மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுத்தது. இன்று காலை வரை அவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது முதற்கட்டமாக அதிகப்படியான 600 ஆசிரியர்களை பணி இடை நீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி தற்போது வரை 1047 ஆசிரியர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே தற்காலிக ஆசிரியர்களை சேர்க்கும் பணியிம் தீவிரமடைந்துள்ளது. தற்காலிக பணியில் சேருவதற்காக இளைஞர்கள் , பட்டதாரிகளின் கூட்டம் அனைத்து பள்ளிகளிலும் அலை மோதுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *