காஷ்மிர் பயங்கரவாத தாக்குதல் – 50 பாதுகாப்பு வீரர்கள் உயிரிழப்பு

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ஜம்மு காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் தமிழக வீரர் ஒருவர் உட்பட 50 வீரர்கள் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் மாநிலம் அவந்திபூராவில் நேற்று பிற்பகல் பாதுகாப்பு படை வீரர்கள் சுமார் 2500 பேரை ஏற்றிக் கொண்டு 78 பேருந்துகள் ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிய இடைவெளி விட்டு சென்று கொண்டிருந்தன. அப்போது, ஜெய்ஷே முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த அடில் அகமது என்ற பயங்கரவாதி, ஸ்கார்பியோ காரில் 350 கிலோ வெடிகுண்டுகளை ஏற்றி வந்து மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.குண்டுகளுடன் கூடிய காரை மோத வந்த போது அவனுக்கு அரண் அமைத்து இதர தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். தோட்டாக்கள் மழையில் ஊடுருவிய அந்த கார் பாதுகாப்பு படையினர் வந்த பேருந்து ஒன்றின் மீது கண் இமைக்கும் நேரத்தில் மோதியதில் பெரும் வெடியோசையுடன் காரும் பேருந்தும் வெடித்துச் சிதறின.சுமார் பத்து கிலோ மீட்டர் தூரம் வரை இந்த குண்டுவெடிப்பின் ஓசை கேட்டது.இச்சம்பவத்தில் 50 பேர் பலியானார்கள்.. காயம் அடைந்த வீரர்கள் அருகில் இருந்த ஸ்ரீநகர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

 • attack 2jpg
 • IED BLAST IN SRINAGAR
 • attack3jpg
 • attack4jpg
இந்திய மண்ணில் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாக இது கூறப்படுகிறது.இத்தாக்குதலையடுத்து காஷ்மீரின் சில பகுதிகளில் இணைய, தொலைபேசி சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. ராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக இரண்டு நாட்களாக ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டிருந்த நிலையில் நேற்று திறக்கப்பட்டதால் ஒரே நேரத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் புறப்பட்டதாக கூறப்படுகிறது. அதிக எடையிலான சக்திமிக்க வெடிகுண்டுகளை ஏற்றிக் கொண்டு பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகளின் கார் எப்படி வர முடிந்தது என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது என்று வீரர்கள் தெரிவித்தனர்.இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஸ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது. தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஓராண்டுக்கு முன்புதான் அந்த இயக்கத்தில் இணைந்துள்ளான். 2 நாட்களுக்கு முன்பே காஷ்மீரில் தற்கொலை படை தாக்குதல் நிகழ்த்த இருப்பதாக வீடியோ வெளியானது என்றும் கூறப்படுகிறது. இதனிடையே இத்தாக்குதலில் உயிரிழந்த வீரர்களில் ஒருவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கர்நாட மாநிலம் மாண்டியாவைச் சேர்ந்த வீரர் ஒருவரும் இத்தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *