மின்னணு வாக்குபதிவு எந்திரத்துக்கு தடை கோரி வழக்கு – சந்திரபாபு நாயுடு

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தேர்தலில் பயன்படுத்துவதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். அமராவதியில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய சந்திரபாபு நாயுடு, டெல்லியில் சரத்பவார் இல்லத்தில் 15 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சட்டரீதியாக எதிர்ப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார்.மீண்டும் வாக்குச்சீட்டு முறையை தேர்தல் ஆணையம் பின்பற்ற வேண்டும் என்று தெலுங்குதேசம் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *