காஷ்மிர் தாக்குதல் பிரதமர் இல்லத்தில் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை

Comments (0) அரசியல், இந்தியா, உலகம், செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

காஷ்மிர் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் முக்கிய அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

காஷ்மிர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் உள்ள அவந்திபுராவில் அணிவகுத்த ராணுவ வாகனங்களின் மீது தீவிரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைப்படை தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.இதையடுத்து காஷ்மிர் மாநிலத் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இணையசேவையின் வேகம் குறைக்கப்பட்டு இருப்பதுடன் முக்கிய நகரங்களில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் பாகிஸ்தான ஆதரவில் இயங்குபவர்கள் என்பதால் இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.தாக்குதலுக்கான பதிலடி கொடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.உலக நாடுகளும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன். இந்த தாக்குதல் குறித்தும் அடுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர்தீவிர ஆலோசனையில ஈடுபட்டுள்ளார். பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனையில் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், அருண் ஜெட்லி, ராஜ்நாத்சிங் ஆகியிர் பங்கேற்றனர். பாதுகாப்புதுறை அதிகாரிகளும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *