திமுக கூட்டணி இன்று போட்டியிடும் இடங்களின் அறிவிப்பு

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள், போட்டியிடும் தொகுதி நிலவரங்கள் குறித்து இன்று அறிவிப்பு வெளியாகிறது.மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம்பெற உள்ளன.காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூகமாகவும், திருப்திகரமாக இருந்ததாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.இந்நிலையில் தொகுதி பங்கீடு மற்றும் உடன்பாடு குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்திக்க, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது படேல், குலாம் நபி ஆஸாத் அல்லது முகுல் வாஸ்னிக் ஆகியோர் இன்று சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்நிலையில் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் பேசிய அவர், டெல்லியில் இருந்து மூத்த காங்கிரஸ் தலைவர் வந்தபின் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *