செய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

மதுரை: மதுரையில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து 100க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி இந்த ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது
.============================================================================================
பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பாட்டவல் பகுதியில் கடந்த 5ம் தேதி ஒரு வீட்டில் சிறுத்தை நுழைந்தது. இதை கண்ட உரிமையாளர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்ததன்பேரில் வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்தனர். அப்போது, சிறுத்தைக்கு காலில் காயம் இருந்தன. சிகிச்சைக்குப் பின் தற்ேபாது, சிறுத்தை குணம் அடைந்துள்ளது. இதையடுத்து நேற்று மாலை சிறுத்தையை வண்டலூர் வன உயிரின பூங்காவுக்கு லாரி மூலம் அனுப்பிவைத்தனர். ஒரு வயது மதிக்கதக்க சிறுத்தையை வண்டலூர் வன உயிரின பூங்காவில் வைத்து பராமரிக்கப்படும்
=======================================================================================
திருச்சி: திருச்சி தேவதானம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் மகன் பிரகாஷ் (34); பெயிண்டர். இவர் நண்பர் ராஜ் என்பவருடன் அப்பகுதி டாஸ்மாக்கில் மது குடித்தனர். எதிரே மெக்கானிக் கடையில் நின்றிருந்தனர். அப்போது ஆண்டார் வீதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெகநாதன்(32), அங்கு ஆட்டோவை நிறுத்தி விட்டு டாஸ்மாக் நோக்கி சென்றார். போதையில் இருந்த இருவரும் அவரை அழைத்து தகராறு செய்து மொபைல் போனை பறித்தனர். ஆத்திரம் அடைந்த ஜெனநாதன் கத்தியுடன் வந்து பிரகாஷ், ராஜ் இருவரையும் கத்தியால் குத்திக் கொன்றார். பின்னர் கோட்டை போலீசில் சரண் அடைந்தார்.
================================================================================

வேளச்சேரி: வேளச்சேரி அடுத்த சித்தாலப்பாக்கம், நாகலட்சுமி நகர், 9வது தெருவில் உள்ள வீட்டின் 2வது மாடியில் இருந்து கீழே குதித்து பெண் தற்கொலை செய்து ெகாண்டார். தகவலறிந்த பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். கோவையை சேர்ந்தவர் திரிசங்கு என்பவர் அங்குள்ள ஓட்டலில் வேலை செய்கிறார். இவரது மகள் ரேஷ்மா தனது சசோதரன் ராகுலுடன் மேற்கண்ட முகவரியில் வசிக்கிறார். அழகு கலை நிபுணரான ரேஷ்மா கோவையில் ஒரு வரை காதலித்ததாகவும், பெற்றோர் எதிர்ப்பால் சில மாதம் முன்பு சென்னைக்கு அனுப்பி வைத்ததும் தெரிந்தது. இந்த காதலுக்கு ராகுல் எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது
====================================================================

புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் காக்கை படத்தை பதிவிட்டுள்ளார். ஆளுநர் மாளிகையில் 2 காக்கைகள் ஜோடியாகவும், ஒரு காக்கை தனியாக இருப்பது போன்ற படத்தை அவர் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே நாராயணசாமி தர்ணாவை காக்கை யோகாவுடன் மறைமுகமாக ஒப்பிட்டு பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
=============================================================================
*🕷கரூர்: மாயனூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 327 கனஅடியில் இருந்து 330 கனஅடியாக அதிகரித்துள்ளது. மாயனூர் அணையில் இருந்து வினாடிக்கு 330 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மாயனூர் அணையின் நீர்மட்டம் 10.36 அடி; நீர் இருப்பு 263.30 மில்லியன் கனஅடியாக உள்ளது. 

==============================================================

திருச்சி: அதிமுக-பாஜக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேர வாய்ப்புள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதிமுக-பாஜக-பாமக கூட்டணிக்கு தேமுதிகவை இழுக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

====================================================================================
மதுரை: நிர்மலாதேவி வழக்கில் சிறையில் இருந்த முருகன், கருப்பசாமி ஆகியோர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். 10 மாத சிறை வாசத்திற்கு பிறகு இருவரும் ஜாமினில் வெளிவந்தனர். உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் நீதிமன்ற நடைமுறையால் ஒருவாரத்துக்கு பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

=====================================================================================

♨சென்னை: குஜராத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 டன் குட்கா பொருட்கள் சென்னை பூந்தமல்லியில் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு வாகனத்தில் இருந்து குட்காவை இறக்கி மற்றோரு வாகனத்திற்கு மாற்றும்போது போலீசார் மடக்கி பிடித்தனர். ரூ. 20 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை கடத்தியது தொடர்பாக வடமாநில ஓட்டுனர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *