பிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்

Comments (0) கலை, சினிமா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

தனது மகள் கொலை செய்யப்பட்டிருக்க கூடும் என நடிகை யாஷிகாவின் தாயார் சென்னை காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார். நடிகர் விமல் நடித்த மன்னர் வகையறா உள்பட ஒரு சில படங்களில் துணை நடிகையாக நடித்த யாஷிகா, கடந்த 12-ஆம் தேதி பெரவள்ளூர் ஜிகேஎம் காலனியில் உள்ள தமது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. தற்கொலைக்கு முன்பாக எழுதிய கடிதம் என ஒன்றைக் கைப்பற்றி பெரவள்ளூர் போலீசார் விசாரணை நடத்தியதில், அவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த வந்த காதலன் அரவிந்த் என்கிற மோகன் பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதனிடையே, உயிரிழந்த துணை நடிகையின் தாயாரான எஸ்தர் பியூலா ராணி, காவல் ஆணையரைச் சந்தித்து ஒரு புகார் அளித்துள்ளார். அதில், ஆரம்பம் முதலே தமது மகள் யாஷிகா, கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் என வலுவான சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். தற்கொலைக் கடிதம் என தம்மிடம் காட்டப்பட்டது தமது மகளின் கையெழுத்து அல்ல என்றும், வேறு யாரோ எழுதி அவ்வாறு சித்தரித்திருப்பதாகவும் பியூலா கூறியுள்ளார். தமது மகள் இறந்ததற்கு 3 நாட்களுக்கு முன்பு கருவை கலைத்திருப்பதால், அது கட்டாயத்தின் பேரில் நடந்திருக்கும் என்றும், பியூலா தெரிவித்துள்ளார்.தமது மகள் தற்கொலை செய்துவிட்டதாக போனில் தகவல் சொன்ன அரவிந்தனின் நண்பன் அஜித், தமது பேச்சை மீறி சடலத்தைப் புதைக்க அனுமதி கிடைக்காது எனக் கூறி சென்னையிலேயே வைத்து எரிக்க ஏற்பாடு செய்ததோடு கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே அரவிந்தனின் நண்பர் அஜித்தையும் கைது செய்து விசாரித்தால் உண்மை தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *