சென்னையில் புதிய அரசியல் கட்சி உதயம்…

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சென்னை பெரம்பூரில் புதிய அரசியல் கட்சியின் துவக்க விழா மிகவும் கோலகலமாக நடைபெற்றது. வருகின்ற நாடளுமன்றம் மற்றும் 18 சட்டபேரவை தொகுதிகளுக்கான இடைதேர்தல் அறிவிப்பு குறித்து நேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தால் நேற்று டெல்லியில் அதிகர்வபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகம் மற்றும் புதுவை மாநிலத்திற்க்கு ஓரே கட்டமாக ஏப்ரல் 18ந்தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனனை அடுத்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் சூடுபிடிக்க துவங்கின. இதனிடையே சென்னை பெரம்பூரில்  மக்கள் ஆளும் அரசியல் என்ற புதிய அரசியல் கட்சி துவங்கப்பட்டது. இதன் நிறுவனரான சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் திருமதி ரம்யா அவர்கள் அக்கட்சியின் கொடியினை ஏற்றி வைத்து புதிய கட்சியின் அலுவலகத்தை திறந்து வைத்தார். மக்கள் ஆளும் அரசியல் கட்சியின் தலைவராக வழக்கறிஞர் தா. வின்சென்ட் அவர்களும். அக்கட்சியின் பொது செயலாரளாக எம்.ஜெ. செந்தில்குமார். அக்கட்சியின் பொருளாராக ஏ. வினோத்குமார்.ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் முதன்மை செயலாளாராக எஸ்.வி விக்னேஸ்வரன். தலைமை செயலாராக வி.ரமேஷ். எஸ். சாந்தகுமார். எம் ராஜ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் திருமதி. வழக்கறிஞர் ரம்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் இக்கட்சி முமுக்க முமுக்க மக்களால் மக்கள்ளுக்காக நடத்தப்படும் கட்சி எனவும் கட்சி பதவி ஏற்று உள்ள ஓருவர் 3ஆண்டுகளுக்கு மேல் கட்சி பதவியில் நீடிக்க முடியாது எனவும் தகுதியின் அடிப்படையின்றி குற்றபிண்ணனி இ்ல்லாத யார் வேண்டுமானலும் கட்சி பதவி வகிக்கலாம் என அவர் தெரிவித்தார். வருகின்ற சட்டபேரவை இடைதேர்தலில் எங்கள் கட்சியானது போட்டியிடும் எனவும் வேட்பாளர் தேர்வு தொகுதியினை சேர்ந்த மக்கள் யார்வேண்டுமானலும் கட்சியில் உறுப்பினராக சேர்ந்து போட்டியிடலாம் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *