நத்தம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

நத்தம், மார்ச். 19: நத்தம் அருகே செந்துறையில் ஊராட்சியைச் சேர்ந்த ரெங்கையன்சேர்வைக்காரன்பட்டி, ஆனம்பட்டி, மேட்டுப்பட்டி , சித்திரைகவுண்டன்பட்டி பகுதிகளில் ஆழ்துளை கிணறுகளுக்கான மின்மோட்டார்கள் போதிய பராமரிப்பின்றி உள்ளது. இதனால் குடிநீர் சேவையை முறையாக வழங்கவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க பலதடவை கோரிக்கை மனுக்கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று திடீரென செந்துறை சந்தைப்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 100நாள் வேலை கடந்த ஓராண்டு காலமாக முறையாக வழங்கவில்லை. எனவே 100நாள் வேலைவாய்ப்பை அனைவருக்கும் முறையாக தொடர்ந்து கிடைக்கவும், குடிநீருக்கான மின்மோட்டாரை முறையாக பராமரித்து நீரை தொடர்ந்து விநியோகிக்கவும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கோரினர். அப்போது பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு உடன் குடிநீர் முறையாக கிடைக்க செய்வதாகவும், 100 நாள் வேலைவாய்ப்பு குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.இந்த சாலை மறியல் காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1மணிவரை 2 மணிநேரம் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் துவரங்குறிச்சி, திண்டுக்கல் செல்ல வேண்டிய பயணிகள் அவதி அடைந்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் பதட்டமாக காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *