அழகான வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் – உதயநிதி

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

தென் சென்னை மக்களவைத் தொகுதியின் திமுக தேர்தல் பணிமனையை உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் நடக்கும் 39 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்ட மன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரத்தை திமுக இன்று தொடங்கியுள்ளது. திமுக தலைவர் முக.ஸ்டாலின் திருவாருர் மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை இன்று தொடங்கினார். தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழியும் தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதேபோல தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து முரசொலி நிர்வாக இயக்குநரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

முன்னதாக, சைதாப்பேட்டை பஜார் சாலையில், தென்சென்னை மக்களவைத் தொகுதிக்கான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பணிமனையை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக தென்சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது உதயநிதி பேசுகையில், “என்னுடைய அக்கா தமிழச்சி. அவரும் என்னை தம்பி என்றுதான் பாசத்தோடு அழைப்பார். கலைஞர் மீதும் எங்கள் குடும்பம் மீதும் அவர் மிகுந்த பாசம் வைத்திருப்பவர். 3 தலைமுறைகளாக இந்த நட்பு தொடர்ந்து வருகிறது. அந்த நட்பே அவருக்கு வெற்றியைப் பெற்றுத் தரும். இவ்வளவு அழகான வேட்பாளரை தென்சென்னை தொகுதி மக்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்ப தவறவிடாதீர்கள். அழகு என்று நான் சொல்வது அவருடைய தோற்றத்தை அல்ல. அவருடைய அழகு தமிழையும், கலைஞரிடமும் ஸ்டாலினிடமும் கொண்ட அன்பையும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற கொள்கையையும், திமுக மீதான கொள்கைப் பிடிப்பையும்தான் அழகு என்று சொல்கிறேன்” என்றார்.

மேலும், “கேடுகெட்ட மோடி ஆட்சியையும், மானங்கெட்ட எடப்பாடி ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்” என்றும் உதயநிதி பேசினார். முன்னதாக தமிழச்சி தங்கபாண்டியன் பேசுகையில், “நாட்டின் அடுத்த பிரதமரை தீர்மானிக்கப்போவது முக.ஸ்டாலின்தான். தமிழகத்தின் அடுத்த முதல்வரும் முக.ஸ்டாலின்தான். எனவே அவரின் ஆதரவு பெற்ற எனக்கு தென்சென்னை தொகுதி வாக்காளர்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *