நீதிமன்ற உத்தரவின் பேரில் பூட்டி சீல் வைத்த உணவகங்களை திறந்த நகராட்சி ஆணையாளர்

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தார்

கொடைக்கானலில் நீதிமன்ற உத்தரவின் பேரில் பூட்டி சீல் வைத்த
உணவகங்களை நகராட்சி ஆணையாளர் திறந்து வைத்தார் .

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த இரண்டு மாதத்திற்கு
முன்பு விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு பூட்டி சீல் வைக்க
உயர்நீதிமன்ற மதுரை கிளை நகராட்சி ஆணையாளருக்கு உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து அதிகாரிகள்  கொடைக்கானல் பகுதிகளில் உள்ள
விதிமீறிய கட்டிடங்களை ஆய்வு செய்து பூட்டி சீல் வைத்தனர் .
இதையடுத்து பாதிக்கப்பட்ட கட்டிட உரிமையாளர்கள் நீதிமன்றத்தில்
மேல் முறையீடு செய்தனர் .இதையடுத்து 12 உணவகங்களை திறப்பதற்கு
நீதிமன்றம் உத்தரவிட்டது .  இதனை தொடர்ந்து இன்று கொடைக்கானல்
ஆணையாளர் முருகேசன் தலைமையில் நகராட்சி
அதிகாரிகள் ஏற்கனவே பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்த
உணவகங்களுக்கு  முதற்கட்டமாக 5 உணவகங்களை திறந்துவைத்தனர் .
மீதம் உள்ள   உணவகங்களை    திறக்கும் பணியானது தொடர்ந்து நாளை
நடைபெறும் என நகராட்சி ஆணையாளர் முருகேசன் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *