கொடைக்கானலில் குறிஞ்சி ஆண்டவர் கோவில் 1008 காவடி ஊர்வலம்

Comments (0) Uncategorized

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கொடைக்கானலில்  குறிஞ்சி ஆண்டவர் கோவில் பங்குனி உத்திர 
திருவிழாவை முன்னிட்டு  1008  காவடி ஊர்வலம் நடைபெற்றது.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில்  அருள்மிகு ஸ்ரீ குறிஞ்சி
ஆண்டவர் கோவில் 42 ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை
முன்னிட்டு முருகப்பெருமானுக்கு  ராஜஅலங்காரம் செய்யப்பட்டும்
பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டும்  பக்தர்களுக்கு அருள் பலித்தார்
பழனி அருள்மிகு தண்டாயுத பணி திருக்கோவிலின் உபகோவிலான
கொடைக்கானல்  அருள்மிகு ஸ்ரீ குறிஞ்சி ஆண்டவர் கோவில் 42 வருட
திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் சார்பில் 1008 காவடி ஊர்வலம்
நடைபெற்றது ஊர்வலத்தில் புகழ் பெற்ற செண்டை மேளம், அலங்கார
காவடிகள், விநாயகர், சிவன், அம்மன், முருகன் போன்ற உருவங்களில்
பக்தர்கள் வேடம் அணிந்து ஊர்வலமாக வந்தனர் இதில் பக்தர்கள் 20 அடி
நீள அழகு குத்தி தங்கள் நேத்திக்கடனை செலுத்தினர். இந்த காவடி
ஊர்வலமானது நாயுடுபுரம் விநாயகர் கோவிலிருந்து   நாயுடுபுரம், டிப்போ,
ஏரி  சாலை, 7 ரோடு, பேருந்துநிலையம், அண்ணாசாலை, மூஞ்சிக்கல்,
லாஸ்காட் சாலை, எம். எம்  சாலை, செட்டியார் பூங்கா வழியாக குறிஞ்சி
ஆண்டவர் கோவிலை அடைந்தனர். அங்கு பக்தர்கள் முருக பெருமானை
வழிபட்டு தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து முருகப்பெருமானுக்கு
சிறப்பு மலர் அபிஷேகமும் கொடுமுடியிலிருந்து கொண்டுவரப்பட்ட
புனித தீர்த்தத்தால் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது 
இந்த 1008 காவடி ஊர்வலத்தில் அதிமுகவின் கூட்டணி கட்சிகளான
பாமக, தேமுதிக, பிஜேபி ஆகிய கட்சி தொண்டர்கள் காவடி எடுத்து வந்த
பக்தர்களை வரவேற்றனர். இந்த ஊர்வலத்தில்  கொடைக்கானல் மற்றும்
அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளிருந்து ஏரளமான பக்தர்கள் கலந்து
கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *