மக்களவைத் தேர்தல் புறக்கணிப்பு – நாட்டுப்படகு மீனவர்கள்

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

டீசலுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் கடந்த 8 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளதை கண்டித்து மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நாட்டுப்படகு மீனவர் சங்க செயலர் பாஸ்கர் தலைமையில் திரேஸ்புரம் கடற்கரையில் திரண்டனர். பின்னர், அவர்கள் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, மீனவர் சங்க செயலர் பாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி திரேஸ்புரத்தில் 436 நாட்டுப்படகுகளுக்கு வழங்கப்பட்டு வந்த டீசல் மானியம் கடந்த 8 மாதங்களாக வழங்கப்படவில்லை. அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்தி முடித்தும் இதுவரை மானியம் வழங்கப்படாமல் உள்ளது. மேலும், தூத்துக்குடி திரேஸ்புரத்தில் உள்ள தூண்டில் பாலம் சரியாக கட்டப்படாததால் படகுகள் தரை தட்டும் நிலை உள்ளது. அந்த பாலத்தை உடனிடயாக சீரமைத்து தர வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *