செங்கத்தில் தூக்கத்தில் ஆழ்ந்த அ.தி.மு.க தொண்டர்கள்…

Comments (0) அரசியல், செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

செங்கத்தில் நாடாளுமன்ற அ.தி.மு.க வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு வேட்பாளார் 3 மணி தாமதமானதால் பிரியாணி உண்ட மயக்கத்தில் தூக்கத்தில் ஆழ்ந்த தொண்டர்கள்…

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தனியார் மண்டபத்தில் நடந்த அ.தி.மு.க நாடாளுமன்ற வேட்பாளர் கூட்டத்திற்கு வேட்பாளர் 3 மணி நேரம் வர தாமதமானதால் தொண்டர்கள் பிரியாணி உண்ட மயக்கத்தில் ஆரபிக்கும் முன்பே ஆழ்ந்த உரக்கம்..நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்கும் நிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் – செயல்வீரர் கூட்டம் – சுவர்விளம்பரம் என படு பரபரப்பு நிலவிவரும் சூழலில் இன்று செங்கம் தனியார் மண்டபத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினருக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அறிமுகவிழா பகல் 12 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது.. ஆனால் அ.தி.மு.க வேட்பாளர் அக்கிரி கிருஷ்ணமூர்த்தி வராததால் கூட்டத்திற்கு வந்திருந்த தொண்டர்கள் மற்றும் கூட்டணி தொண்டர்கள் என அனைவரும் மண்டத்தில் உரங்கிக்கொண்டிருந்ததால் நீண்ட நேரம் காத்திருந்த அ.தி.மு.க கூட்டணி தொண்டர்களுக்கு முகம் சுழிப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *