கொடைக்கானல் பண்ணைக்காடு பிரிவில் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற 18 லட்சம் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை உதவி அலுவலர் கார்த்திகேயன் வாகன சோதனை செய்துகொண்டிருக்கும் போது திருச்சியில் இருந்து கொடைக்கானல்  ஈட்டி பள்ளம் பகுதியில் சார்ந்த  தனபாலன் என்பவர்  ஆம்னி காரில் தனது குடும்பத்துடன் வந்துள்ளார் . அப்போது கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையின் போது உரிய ஆவணம் இன்றி காரில் இருந்த  ரொக்கமாக 18 லட்சம் ரூபாயை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து கொடைக்கானல் வட்டாச்சியர்  அலுவலகத்தில்  வட்டாச்சியர் வில்சனிடம் ஒப்படைத்தனர் . கொடைக்கானலில் பறிமுதல் செய்யப்பட்ட 18 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் அதிகாரிகளும், வட்டாட்சியரும் செய்தியாளர்களுக்கு  வீடியோ எடுப்பதற்கு அனுமதிக்கவில்லை , இதில் கூடுதல் பணம் ஏதும் இருக்கிறதா என சந்தேகமும் , பணம் எடுத்து வந்த வாகனத்தையும் கைப்பற்றாதது ஏன் எனவும் ,  காரில் எடுத்துவரப்பட்ட மொத்த தொகையின் மதிப்பு அதிகமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது . இது குறித்து மாவட்ட தேர்தல் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *