தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக மேலும் ஆறு குழுக்கள் – ஆட்சியர் சந்தீப் நந்தூரி

Comments (0) செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக மேலும் ஆறு குழுக்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கானவாக்குப்பதிவு வரும் ஏப்ரல் திங்கள் 18-ம் தேதி நடைபெற உள்ளதை தொடர்ந்து, என் வாக்கு, என் உரிமை மற்றும் 100% வாக்காளர்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வுநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 
இந்நிலையில், அதன் ஒருபகுதியாக, 26.03.2019- அன்று, கூட்டுறவுத்துறை மூலம்பொதுவிநியோகத்திட்டத்தின் நியாயவிலைக்கடைகளில் விநியோகம் செய்யப்பட்டு வரும் சமையல் எண்ணெய், அம்மா உப்பு மற்றும் ஊட்டி, தேயிலை ஆகிய பொருட்களின் மீது, வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் ஒட்டுவது தொடர்பான நிகழ்ச்சி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அதிகாரி சந்தீப் நந்தூரி துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சிக்கு வருகைதந்த அனைவருக்கும் வாக்குப்பதிவுசரிபார்ப்பு கருவி (VVPAT) குறித்த செயல்விளக்கம் கூட்டுறவுத்துறையின் அலுவலர்கள் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது.
மேலும், வாக்காளர் விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், தூத்துக்குடி தொகுதியில் 1400 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள பகுதிகளில் கூடுதல் வாக்கு சாவடி அமைக்கப்படும். மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்ய பட்டுள்ளதாகவும், மேலும் விதிமீறல்களை தீவிரமாக கண்காணிப்பதற்காக நேற்று முன்தினம் முதல் கூடுதலாக 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் 24 மணி நேரமும் செயல்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *