திமுக கூட்டணி 4வது இடத்தை பிடிக்கும் – ராமதாஸ்

Comments (0) அரசியல், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஜோதிமுத்து போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக கோபால்பட்டியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாமகநிறுவனர் ராமதாஸ், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நரேந்திரமோடி தான் நமது நாட்டின் பிரதமர் என பிரகடனப்படுத்தி வாக்கு சேகரிப்பதாகவும், ஆனால் எதிரணியில் முரன்பாடான கூட்டணி அமைத்து வயதில் சிறியவரான ராகுல்தான் பிரதமர் என கூறி வாக்கு சேகரிக்கின்றனர் என்றார். அரசியல் ஆண்மை இருந்தால் ஸ்டாலின் தங்கள் மீது ஆதரங்களுடன் லோக் ஆயுக்தா மன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அரசியல் வாழ்வில் இருந்தே விலக தயார் என்று சவால் விடுத்தார். 
நிகழ்ச்சியில் பேசிய ராமதாஸ், அதிமுக சந்தித்த முதல் தேர்தலான திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலிலேயே முதல் இடத்தை பிடித்தது. தற்போது நடக்கும் தேர்தலில் திமுக கூட்டணி 4வது இடத்தை பிடிக்கும் என்றார். மேலும் அதிமுக கூட்டணியினர் முக மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், திமுகவினர் தலையை குனிந்து கொண்டு செல்வதாகவும் குறிப்பிட்டார். கூட்டணி அறிவிப்புக்கு முன்னரே அதிமுக – பாமக , தொண்டர்கள் கைகோர்த்து விட்டனர் என்றும் கூறினார். தேசிய கிராமப் புற சுகாதாரத்திட்டத்தை கொண்டு வந்து, ஐ.நா.வின் விருதைப்பெற்றவர் அன்புமணி என்று பேசிய ராமதாஸ், ரயில்வேதுறை இணை அமைச்சராக இருந்த வேலு அனைத்து மீட்டர்கேஜ் பாதைகளையும் அகல ரயில் பாதைகளாக மாற்றினார். ஆனால் அந்த திட்டங்களை திமுக தாங்கள் தான் கொண்டு வந்ததாக பிரச்சாரம் செய்வதாக குற்றம்சாட்டினார். தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை மத்திய அரசிடம் போராடி, வாதாடி பெறப் போராடுவோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *