மோடி வில்லனாகவும் அவருக்கு கை கூலியாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

Comments (0) அரசியல், செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் நாடாளுமன்ற தி.மு.க வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து வாக்கு சேகரிக்க வந்த உதயநிதி ஸ்டாலின் செங்கத்தில் நடந்த தேர்தல் பிரச்சார மேடையில் பேசுகையில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற திமுக தேர்தல் அறிக்கை ஏழை எளிய மக்களுக்கு பயனுள்ள வகையில் இருப்பதாகவும் விவசாயம் சார்ந்த பகுதி என்பதால் அனைத்து விவசாயிகளுக்கும் முற்றிலும் பயிர் கடன் தள்ளுபடி போன்ற அருமையான திட்டங்கள் இருப்பதால் திமுகவின் தேர்தல் அறிக்கை கதாநாயகனாகவும்  மத்தியில் ஆட்சி புரியும் பிரதமர்  மோடி வில்லனாகவும் – வில்லனுக்கு  கைக்கூலியாக  தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருப்பதாகவும் மற்றும் காமெடியன்களாக தமிழக அ.தி.மு.க அமைச்சர்கள் இருப்பதாகவும் கூறினார்.
மேலும் ராமதாஸ் வார்டு கவுன்சிலர் பதவிக்கு கூட லாயக்கில்லாதவர் தமிழக முதல்வராக உள்ளார் எனவும் இதே போன்று அன்புமணி ராமதாஸ் OPS ஐ டயர் நக்கி எனவும் விமர்சனம் செய்தவர்கள் இன்று மெகா கூட்டணி என்ற பெயரில் கூட்டணி அமைத்து இருப்பதால் இந்தக் கூட்டணி கேடுகெட்ட கூட்டணி என விமர்சனம் செய்தார்
மேலும் காலை 11 மணிக்கு வாக்கு சேகரிக்க வருவதாக அறிவித்து சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக தாமதம் ஆனதால் கடும் வெயிலில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் என அமர வைத்தால் பெரும் அவதிக்குள்ளானார்கள். பின்னர் கடும் வெயிலில் காத்திருந்த தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இசைக்கச்சேரியை உதயநிதி ஸ்டாலின் பாடல்களை பாடி உற்சாகப்படுத்தினர். அப்போது மூதாட்டி ஒருவர் மேடையில் ஏரி நடனம் ஆடியதால் கூட்டத்தில் உள்ள தொண்டர்கள் குஷியானதால் ஏராளமான பெண் தொண்டர்கள் கூட்டத்தில் நடனமாட தொடங்கினர். உச்சிவெயிலில் இருந்த தொண்டர்களுக்கு  வெயில் தெரியாமல் பிரச்சார கூட்டம் கல கலப்பாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *