தூத்துக்குடியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தூத்துக்குடியில் வாக்கு எண்ணிக்கை மையத்தை தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.
வாக்கு எண்ணிக்கை மையம்
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் விளாத்திகுளம் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. தொடர்ந்து மே மாதம் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மையம் தூத்துக்குடி அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் தேர்தல் பார்வையாளர்கள் சீமா சர்மாஜெயின், துக்கி சியாம் பெய்க், மாதவி லதா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அங்கு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் விளாத்திகுளம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான அறை, வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைப்பதற்கான அறை, வரவேற்பு அறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளன. இந்த அறைகளையும், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜித் சிங் கலோன், மாவட்ட பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் உமாசங்கர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
கூடுதல் எந்திரங்கள்
இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி கூறுகையில், ‘வருகிற 18-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. அதன்பிறகு வாக்குப்பதிவு எந்திரங்கள் தூத்துக்குடி அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளது. அங்கு வாக்கு எண்ணிக்கை அறை, வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் வாக்குச்சீட்டு பொருத்தும் எந்திரங்கள் கூடுதலாக பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது’ என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *