நத்தம் பகுதியில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்து 54 கிராமங்களில் வாக்குகள் சேகரிப்பு-

Comments (0) அரசியல், செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட நத்தம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சி பாமக வேட்பாளர் ஜோதிமுத்து நத்தம் அருகே முளையூரிலிருந்து பிரச்சாரத்தை தொடங்கினார். அங்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். வேட்பாளருடன் அதிமுக மாநில ஜெ பேரவை இணைசெயலாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர் ஷாஜகான், நகர் செயலாளர் சிவலிங்கம், பேரவை மாவட்ட துணைசெயலாளர் ஜெயபால், ஒன்றிய  இளைஞரணி செயலாளர் உத்தமன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர். தொடர்ந்து ராவுத்தம்பட்டி, எரமநாயக்கன்பட்டி, உலுப்பகுடி, புன்னப்பட்டி, வத்திபட்டி, பரளி, நத்தம் உள்ளிட்ட நகரம் 54க்கும் மேற்பட்ட கிராமங்களில் மாம்பழச் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.
            சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கிராமங்கள் தோறும் பெண்கள் ஆரத்தி எடுத்தனர். இதில் வேட்பாளர் ஜோதிமுத்து பேசியதாவது. நான் ஒட்டன்சத்திரம் பகுதி கிராமத்தை சேர்ந்தவன். கிராம மக்கள், விவசாயிகளின் கஷ்டம் தெரிந்தவன். எனவே உங்கள் வீட்டு பிள்ளையாக பாவித்து எனக்கு மாம்பழம் சின்னத்தில் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தால் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து மக்களுக்கும் எந்த விதமான நிபந்தனையும் இல்லாமல் அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர நேரடி உதவித்தொகை ரூ.1500 வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம். வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு நீர் பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைகளுக்காகவும் தண்ணீர் கொண்டு செல்லும் நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்த ஏற்பாடு செய்வேன். இந்திய நாட்டில் அலுவல் மொழிகளில் ஒன்றாக தமிழை அறிவித்திட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவேன். மேலும் நத்தம் தொகுதி அளவில் தொழில் வளத்தை மேம்படுத்தவும், குடிசைத் தொழிலை விரிவுபடுத்தவும் உரிய நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.
            இந்த பிரச்சாரத்தின் போது பாஜக, தேமுதிக, தமாக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *