நத்தம் அருகே முத்தாலம்மன் கோயில் விழா

Comments (0) ஆன்மிகம், செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

நத்தம், ஏப். 5: நத்தம் அருகே நடுவனு£ரில் உள்ள முத்தாலம்மன் கோயில் திருவிழா நடந்தது. இதையொட்டி பிடிமண் எடுத்துக் கொடுக்கப்பட்டு 15 நாள் காப்பு கட்டி விழா தொடங்கியது. நல்லகண்டத்தில் சாமி சிலை செய்யப்பட்டு  நேற்று முன்தினம் நடுவனு£ர் கொண்டு வரப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. பின்னர் அங்கிருந்து அதிர்வேட்டுகளுடன், மேள தாளம் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு கோயிலை வந்தடைந்தது. அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றதை தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி தந்தது. நேற்று சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் தொடர்ந்து கிடாவெட்டு நடந்தது. விழாவில் பக்தர்கள் அம்மனுக்கு மாவிளக்கு, ஆரத்தி போன்றவைகளை எடுத்து வந்து வழிபட்டனர். பின்னர் அன்று மாலை பூஞ்சோலையை அடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை நடுவனுர் கிராம பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *