2ஜி பணத்தை கொண்டு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற பிளான் – தமிழிசை சவுந்தரராஜன்

Comments (0) அரசியல், செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

2ஜி பணத்தை வைத்துக்கொண்டு தான் தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற பிளான் பண்ணுகிறார்கள். இதனால் திமுக, உள்ளிட்ட கூட்டணி கட்சியினரின் அனைத்து வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தரராஜன் பரபரப்பு பேட்டி.  
தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆதரவாக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குறுக்குச்சாலை, ஒட்டப்பிடாரம், புதியம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்த வேனில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவரும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், கனிமொழி பதவியை 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கமிஷன் பெற்றதால் கனிமொழி சிறைசென்றார். அதற்காக தனது பதவியை அவா பயன்படுத்தியதாக தமிழிசை குற்றம்சாட்டினார். இலங்கையில் பலலட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு திமுக  துணை போனதாக கூறிய அவர், என்னை பொறுத்தவரை வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்துவதாக தெரிவித்தார். வேலூர் தொகுதியில் தேர்தலை நிறுத்த சதிசெய்வதாக ஸ்டாலின் கூறி வருவது குறித்து கேட்டதற்கு, ஓட்டுக்காக நிப்பாட்டுகிறார்களா ? அல்லது நோட்டுக்காக நிப்பாட்டுகிறார்களா ? என கேள்வி எழப்பிய அவர், அங்கு பணம் எடுத்தது நிருப்பிக்கப்பட்டுள்ளது என்றார். சாதாரண டிரங் பெட்டியை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு முன்பு சென்னை வந்ததாக குறிப்பிட்ட துரைமுருகன், அந்த டிரங் பெட்டியில் இவ்வளவு நோட்டா ?. ஆக இத பார்க்கும் போது திமுக தேர்தலையே எல்ல இடத்திலேயும் ரத்து செய்ய வேண்டும் என கூறினார். மேலும் 2ஜி பணத்தை வைத்துக்கொண்டு தான் தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் பிளான் பண்ணுகிறார்கள். இதனால் திமுக, உள்ளிட்ட கூட்டணி கட்சியினரின் அனைத்து வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றார். பிரதமர் சட்டவிதிகளுக்கு உட்பட்டுத்தான் நடைமுறைப்படுத்துகிறார் என்றார். ஆதலால் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடத்துவதற்கு வாய்ப்பில்லை என்றார்.ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் எதிர்மறை கருத்தைக்கொண்டு அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள் நாங்கள் நேர்மறை கருத்தை கொண்டு பிரச்சாரம் செய்கிறோம் என்றார். இலங்கையில் பலலட்சம் தமிழர்கள் கொள்ளப்படும் பொழுது மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தது திமுக எனவே இதைப்பற்றி பேச கனிமொழிக்கு என்ன உரிமையுள்ளது என்றார். ஸ்டெர்லைட் ஆலை குறித்து திமுக பேச எவ்வித தார்மீக உரிமையும் இல்லை என்றார். மேலும் இதுகுறித்து பேசினால் அதற்கு பதிலடி கொடுக்க எங்களுக்கு தெம்பும் திராணியும் உள்ளது என்ற அவர், அவர்களது எண்ணம் கிளர்ச்சி, எங்களது எண்ணம் வளர்ச்சி என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *