கொடைக்கானலில் வெட்டுவரை அருகே உள்ள பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்ட காட்டு எருமையை 2 மணிநேரம் போராடி மீட்ட வனத்துறையினர்

Comments (0) சுற்றுலா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கொடைக்கானலில் வெட்டுவரை அருகே உள்ள பாலத்தின்  அடியில்  
சிக்கிக்கொண்ட காட்டுஎருமையை 2 மணிநேரம் போராடி
வனத்துறையினர் மீட்டனர் .
திண்டுக்கல் மாவட்டம்  கொடைக்கானலில் வெட்டுவரை அருகே  இன்று
காலை 3 காட்டு எருமைகள் சண்டையிட்டதில் ஒரு
காட்டுஎருமைக்கு  காயம் ஏற்பட்டு அருகே உள்ள பாலத்தின் அடியில்
சிக்கிக்கொண்டது . இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள்
வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் . தகவல் அறிந்து விரைந்து
வந்த வனத்துறையினர் பாலத்தின் அடியில் சிக்கி கொண்ட சுமார் 5
வயதுள்ள பெண் காட்டு எருமையை மீட்கும் பணியில் தீவிரமாக
ஈடுபட்டனர். காயமடைந்த காட்டு எருமைக்கு மயக்க ஊசி செலுத்தி
அதன்  பிறகு ஜேசிபி வாகனத்தை கொண்டு  காட்டு எருமையை சுமார்
இரண்டு மணிநேரம் போராடி உயிருடன் மீட்டனர் . அதன் பிறகு 
மீட்கப்பட்ட காட்டு எருமைக்கு சிகிக்சை அளிக்கப்பட்டு வனப்பகுதிற்குள்
விடப்பட்டது .இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *