செங்கம் அருகே, அரசு பள்ளியில் புதியதாக சேர்ந்த மாணவர்களை மேளதாளத்துடன் வரவேற்ற பள்ளி நிர்வாகம் .

Comments (0) கல்வி, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கொழுந்தம்பட்டு கிராமத்தில் உள்ள  ஊராட்சி ஒன்றிய  தொடக்கப்பள்ளியில் புதியதாக சேரும் மாணவர்களை  வரவேற்கும்விழா மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமையில்  நடைபெற்றது. 

    இந்த நிகழ்வையொட்டி,   ஊர்ப்பொதுமக்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள்  புதிதாக இந்த பள்ளியில் சேர  வந்த 10 க்கும் மேற்பட்ட மாணவர்களை மாலையிட்டு  மேளதாளத்துடன்  முக்கிய வீதிகள் வழியாக பள்ளிக்கு அழைத்து வந்தனர். 
பின்னர் விழா மேடையில் புதிய மாணவர்களை கெளரவிக்கும் விதமாகசான்றிதழ் வழங்கி புத்தகம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
மேலும் 2019 – 20  ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்காக விழா எடுக்கப்பட்டு – கலை நிகழ்ச்சி – நாட்டுப்புற இசை நிகழ்ச்சி – சிறுசேமிப்பு கணக்கு துவங்குதல் – அபாகஸ் வகுப்பு துவக்க விழா என பல்வேறு நிகழ்ச்சிகள் விழா மேடையில் நடைபெற்றது.
      இந்த விழாவானது அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தவும், பள்ளி வளங்களை மேம்படுத்தவும் மேலாண்மைக்குழுவினரின் பங்களிப்பை அதிகப்படுத்துவதற்காக நடத்தப்பட்டது.
    இந்த நிகழ்ச்சியில், உதவி  கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர் மற்றும்  ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *