குமிழி ஊராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வருவாய்த்துறையினர் நோட்டீஸ் விநியோகம் அலுவலர்களை சிறை பிடித்த பொதுமக்கள் பரபரப்பு

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
கூடுவாஞ்சேரி, ஏப் 10 : தேர்தல் புறக்கணிப்பு செய்து வரும் நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வருவாய்த்துறையினர் நோட்டீஸ் ஒட்டினர். இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அலுவலர்களை சிறை பிடித்ததால் குமிழி ஊராட்சியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை வண்டலூர் அடுத்த குமிழி ஊராட்சியில் குமிழி, மேட்டுபாளையம், அம்மணம்பாக்கம், ஒத்திவாக்கம், எடையர்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் மேட்டுபாளையம் கிராமத்தில் சர்வே எண் 310-1ல் உள்ள அரசுக்கு சொந்தமான கரடு புறம்போக்கு நிலத்தில் குமிழி கிராமத்தை சேர்ந்த நிலமற்ற ஏழைகள் 150க்கும் பேர் குடிசை வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இதில் ஒரு தரப்பினர் மேற்படி சர்வே எண்ணில் குடியிருக்கும் ஆதிதிராவிடர் குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரியும், மற்றொரு தரப்பினர் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் இதுதொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதில் இருதரப்பினரின் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. மேலும் குமிழி ஊராட்சியில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து அவரவர் வீடுகளில் பொதுமக்கள் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கூடுவாஞ்சேரி வருவாய் ஆய்வாரள் முருகன், கிராம நிர்வாக அலுவலர் தணிகாசலம் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் நேற்று மதியம் ஒவ்வொரு வீடுகளிலும் நோட்டீஸ் ஒட்டினர். இதில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அலுவலர்களை சிறை பிடித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது வருவாய்த்துறையினரிடம் பொதுமக்கள் கூறுகையில், குமிழி ஊராட்சிக்கு உட்பட்ட ஜெ.ஜெ.நகரில் குடியிருக்கும் ஆதிதிராவிட குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தியும், மின் இணைப்பு வழங்க கோரியும், பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகத்தை திறக்க வலியுறுத்தியும், இயங்காத துணை சுகாதார நிலையத்தை மீண்டும் இயக்க வைக்க கோரியும், ஊராட்சிக்கு உட்பட்ட ஒத்திவாக்கம் வருவாய் கிராமத்தில் தனியார் நிறுவனம் கட்டுபாட்டில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மீட்க வலியுறுத்தியும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனு கொடுத்தும், பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பயணில்லை. எனவே நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. மேலும் இதுகுறித்த வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான அறிவிப்பாணையை எதற்காக வீடுகளில் ஒட்டுகிறீர்கள் என்று கேள்வி கேட்டனர். இதனையடுத்த அங்கிருந்து வருவாய்த்துறையினர் புறப்பட்டு சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.Attachments areaReplyForward

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *