என் சின்னம் மட்டும் மங்கலாக உள்ளது – சீமான் குற்றசாட்டு

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மாலதி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நாகை அவுரித் திடலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய சீமான், “பாரதிய ஜனதா கட்சி கொண்டுவந்த 10 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள்கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் ஐந்து மக்களவைத் தொகுதிகளில் பாரதிய ஜனதா போட்டியிடுகிறது. ஆனால் தூத்துக்குடியில் மட்டுமே பாஜகவை எதிர்த்து திமுக போட்டியிடுகிறது.18 ஆண்டுகளாக அமைச்சரவையில் இருந்த திமுக இனி ஆட்சிக்கு வந்தபின் என்ன செய்யமுடியும்? கஜா புயலின் தாக்கத்தால் தஞ்சை, நாகப்பட்டினம் பகுதியில் நாடே அழிந்துபோனது. உலகத்துக்கு சோறிட்ட ஒரு இனக்கூட்டம் பஞ்சப் பராரிகளாக பசியோடு கையேந்தி நின்றார்கள். யார் வந்து பார்த்தார்கள்? காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் பிரதமர் மோடியும் வந்து பார்த்தார்களா? அவர்கள் வரவேண்டாம், வருத்தம் தெரிவித்து ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு அறிக்கையாவது வெளியிட்டு இருக்கலாமே.
விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வோம் என்று பேசுகிற இந்த அரசு, விவசாயிகள் யாரால் கடனாளியானார்கள்? யாருடைய ஆட்சியால் கடனாளியானார்கள் என்பதற்கு பதிலுண்டா? தேர்தலில் வாக்குச்செலுத்தும் இயந்திரத்தில் எல்லா சின்னங்களும் பளிச்சென தெரிகிறது; ஆனால் என் சின்னம் மட்டும் தெரியவில்லை. வெறும் வெள்ளையாகவே விட்டிருக்கலாம். சின்னத்தை சிறியதாக போட்டது மட்டுமல்லாமல் மங்கலாக பொறித்துள்ளனர்” என்று குற்றம்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *