ஸ்டெர்லைட் ஆலையை திறந்து வைத்த கட்சிகளுக்கு அதரவு கிடையாது – ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு மகேஷ்

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ஸ்டெர்லைட் ஆலையை திறந்து வைத்த, துவக்கிய கட்சிகளுக்கு அதரவு கிடையாது என தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருரங்கிணைப்பாளர் மகேஷ் பேட்டி.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் குமரெட்டியாபுரம் மகேஷ், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி வீரப்பனை சந்தித்து மனு அளிப்பதற்காக வந்தனர். அப்பொழுது அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், தூத்துக்குடியில் மண்ணையும், இயற்கை வளத்தையும் பாதுகாக்க ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக அறவழியில் 100 நாட்கள் போராடி 100வது நாள் போராட்டத்தின் போது மண்ணுயிர் காக்க இன்னுயிர் நீத்த 14 தியாகிகளுக்கு வருகிற மே 22ஆம் தேதியன்று ஓட்டுமொத்த தூத்துக்குடி மாவட்ட மக்கள் சார்பாகவும், தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடந்த அனுமதி கோரியும், மேலும் துப்பாக்கி சூட்டில் இறந்த 14 பேரின் நினைவாக தூத்துக்குடி மையப்பகுதியில் அரசு சார்பில் நில ஓதுக்கீடு செய்து  அதில் உயிரிழந்தவர்களுக்கு மணிமண்டபம் அமைத்து தர வேண்டும் என்றார்.மேலும் வரகிற பாராளுமன்ற தேர்தலில் ஆலைக்கு ஆதரவாக இருக்கக்கூடிய அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும், ஆதரவாக செயல்படுகின்ற அமைப்புகளை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய தங்களுக்கு அனுமதி தர வேண்டும் என வலியுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்ததாக தெரிவித்த அவர், மேலும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்த வைத்த, துவக்கிய கட்சிகளுக்கு ஆதரவு கிடையாது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *