நத்தத்தில் திமுகவினர் அராஜகம் சுயேட்சை வேட்பாளரை பிரச்சாரம் செய்ய விடாமல் விரட்டி அடிப்பு. சாலை மறியல் . போக்குவரத்து பாதிப்பு .*

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

நத்தத்தில் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி திமுகவினர் அராஜகம். சுயேட்சை வேட்பாளரை பிரச்சாரம் செய்ய விடாமல் விரட்டி அடிப்பு. சாலை மறியல் . போக்குவரத்து பாதிப்பு .*
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் திண்டுக்கல் நாடாளுமன்ற  திமுக வேட்பாளரை ஆதரித்து இன்று (12.04.19) உதயநிதி ஸ்டாலின்  நத்தம் பேருந்து நிலையம் அருகே  பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதே போல் தேர்தல் அலுவலரிடம் முறையாக அனுமதி பெற்று சுயேட்சை வேட்பாளர் அன்பு ரோஸ் இன்று நத்தம் பகுதியில் காலை முதல்  பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் நத்தம் பேருந்து நிலையம் அருகே உதயநிதி ஸ்டாலின் வருகைக்காக காத்திருந்த திமுகவினர், சுயேட்சை வேட்பாளர் அன்பு ரோசை இப்பகுதியில் பிரச்சாரம் செய்யக் கூடாது என தகராறில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த சுயேட்சை வேட்பாளர் அன்பு ரோஸ் நத்தம் – திண்டுக்கல் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் சுயேட்சை வேட்பாளர் அன்பு ரோசை விரட்டி விரட்டி அடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சுயேட்சை வேட்பாளரை தி மு க வினரிடம் இருந்து காப்பாற்றி அனுப்பி வைத்தனர். இதனால் நத்தம் பகுதியில் சிறிது நேரம்  பதட்டமான சூழ்நிலை நிலவியது. காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை உதயநிதி ஸ்டாலினுக்கு  பிரச்சாரம் அனுமதி வழங்கி உள்ள நிலையில் காலை 10.30 மணி வரை வராததால் திமுக தொண்டர்கள் ஆவேசம் அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *