இரட்டை இலை சின்னம் துரோகிகள் கையில் சிக்கியுள்ளதாக டிடிவி தினகரன் செங்கத்தில் வாக்கு சேகரிப்பின் போது ஆவேச பேச்சு…

Comments (0) அரசியல், செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  


இரட்டை இலை சின்னம் துரோகிகள் கையில் சிக்கியுள்ளதாக டிடிவி தினகரன் செங்கத்தில் வாக்கு சேகரிப்பின் போது ஆவேச பேச்சு…

திருவண்ணாமலை நாடாளுமன்ற அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் வேட்பாளராக ஞானசேகரை ஆதரித்து வாக்கு சேகரிக்க வந்த அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரில் தேர்த்தல் பிரச்சாரத்தின்போது அம்மாவின் வெற்றி சின்னமான இரட்டைஇலை சின்னம் தற்போது துரொகிகளின் கைகளில் கிடைத்துள்ளதாகவும் மேலும் அந்த இரட்டை இலை சின்னத்தை ஆர்கே நகர் பகுதியிலேயே புறக்கணித்துவிட்டனர். மேலும் அந்த சின்னம் காலாவாதியாக இருப்பதாகவும் புரட்சிதலைவி கையில் உள்ளவரைதான் அது வெற்றிசின்னம் தற்போது அது வெற்றிசின்னம் அல்ல என குறிப்பிட்டார். மேலும் தமிழகத்தை வஞ்சிக்ககூடிய மோடி அரசையும் தமிழகத்தை ஆண்டுவரும் எடப்பாடி அரசையும் அகற்றிட பரிசுபெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் மேலும் செங்கம் பகுதியில் உள்ள மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் வாக்குறுதிகள் அளித்தார். செங்கம் பகுதிக்கு வேட்பாளாரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த தினகரனை காண மாற்று கட்சிகளை விட அதிகமான மக்கள் கூட்டம் அதிகம் வந்தது குறிப்பிட தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *